#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 171-வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தலைவர் 171-வது படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
வேட்டையின் பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால் ரஜினி அதை முடித்துவிட்டு தலைவர் 171 வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 171 படத்தில் ரன்வீர் சிங், நடிகை ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
\
இந்த நிலையில் 90’S பிரபல நடிகர் மைக் மோகன் தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தலைவர் 171 வது படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#image_title
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…