Categories: சினிமா

திடீரென இயக்குனராக மாறிய MGR… ஷாக் ஆன ஜெயலலிதா கொடுத்த ரியாக்க்ஷன் என்ன தெரியுமா…?

Spread the love

MGR தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். எம்ஜிஆரின் முழு பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பதாகும். எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆவார். 1977 முதல் 1987 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர். இந்தியாவில் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளில் எம்ஜிஆர் ஒருவர்.

எம்ஜிஆர் முதலில் நாடகக் குழுவில் சேர்ந்து பின்பு சினிமாவில் தோன்றியவர். 1936 ஆம் ஆண்டு ‘சதிலீலாவதி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எம்ஜிஆர். காதல் மற்றும் ஆக்சன் படங்களில் நடித்து பிரபலமானார் எம்ஜிஆர். மு கருணாநிதி எழுதிய 1954 ஆம் ஆண்டு வெளியான ‘மலைக்கள்ளன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலத்தையும் திருப்புமுனையும் பெற்றார் எம்ஜிஆர். பின்னர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழடைந்தார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானார். ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் நடிக்கும் படங்கள் மெகா ஹிட் ஆனது. இவர்களின் ஜோடி பொருத்தம், இவர்களுக்கு நடுவில் இருக்கும் கெமிஸ்ட்ரியும் ரசிக்கும்படியாக இருந்தது. ஆகவே எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்தால் போதும் அந்த படம் ஹிட் தான் என்ற அளவுக்கு இவர்கள் பேசப்பட்டனர். தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களை கவர்ந்த எம்ஜிஆர் தேசிய திரைப்பட விருது, இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருது, பாரத ரத்னா விருது ஆகியவற்றை வென்றவர்.

எம்ஜிஆர் ஜெயலலிதா இணைந்து நடிக்கும் படங்கள் என்றாலே சூட்டிங் ஸ்பாட் மிகவும் கலகலப்பாகவே இருக்கும். அப்படி எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்து 1966 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகராசி’ இத்திரைப்படத்தை திருமுகம் இயக்கியிருப்பார். இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் இயக்குனராக மாறி ஜெயலலிதாவை திட்டியிருக்கிறார்.

முகராசி படத்திற்காக வழக்கம் போல சூட்டிங் பணிகளை காலையில் ஆரம்பித்துவிட்ட பட குழுவினர் இயக்குனருக்காக காத்திருந்தனர். அப்போது அன்றைக்கு இயக்குனர் திருமுகத்திற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவரால் வர இயலவில்லை. அன்றைய சூட்டிங் கேன்சல் பண்ணினால் நிறைய பாதிப்புகள் உண்டாகும் என்பதால் அன்றைய காட்சிகளை படமாக்குவதற்கு எம் ஜி ஆர் அவர்கள் இயக்குனராக வழி நடத்துவதாக ஒத்துக் கொண்டார். அப்போது எம்ஜிஆர் இயக்குனராக அனைவரையும் வழி நடத்திக் கொண்டிருக்கையில் முதல் காட்சி படமாக தயாராகிக் கொண்டிருந்தது.

அந்தக் காட்சியில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நடிக்க வேண்டும் வீட்டில் இருந்து எம்ஜிஆர் கோபமாக வெளியே வர வேண்டும் பின்னால் ஜெயலலிதா கணவரான எம்ஜிஆரை சமாதானப்படுத்தி கொண்டே பின்னாடியே நடந்து வரவேண்டும். இதுதான் அந்த காட்சி. அப்போது இயக்குனராக எம்.ஜி.ஆர் இருந்ததால் எம்ஜிஆர் இடத்தில் உதவி இயக்குனரை வர செய்து பின்னாடி ஜெயலலிதாவை நடிக்க செய்து ஒத்திகை பார்த்தார் எம்ஜிஆர்.

அப்போது உதவி இயக்குனருக்கு பின்னாடி வந்த ஜெயலலிதா அழுது கொண்டே நடிக்க வேண்டிய காட்சியில் சிரித்துக்கொண்டே வருவதை கண்ட எம் ஜி ஆர் கோபமடைந்து இது என்ன விளையாடுவதற்கான இடமா நடிக்க வந்திருக்கோம் அதை சரியா செய்யணும் அப்படின்னு ஜெயலலிதாவை திட்டிவிட்டார் எம்ஜிஆர். இதனால் ஷாக் ஆகி போன ஜெயலலிதா சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு முதல் ஷாட்டிலேயே எம்ஜிஆர் எதிர்பார்த்தபடி நடித்து முடித்துவிட்டார் ஜெயலலிதா. இப்படி இயக்குனர் வர இயலாததால் எம்ஜிஆர் இயக்குனராக மாறி படக்குழுவினரை வழிநடத்தி சென்றது மட்டுமில்லாமல் ஜெயலலிதா என்ற பாகுபாடு பார்க்காமல் வேலை நடக்கவில்லை என்பதால் திட்டியும் இருக்கிறார் எம்ஜிஆர்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

4 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

4 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

4 மணத்தியாலங்கள் ago