Categories: சினிமா

நீண்ட வசனத்தைப் பேசி சிவாஜி கணேசனையே வியக்க வைத்த எம் ஜி ஆர்… எந்த படத்தில் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.

ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.

அதன் பிறகுதான் மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்னர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றார். அப்போதுதான் சிவாஜி கணேசனும் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலத்தைப் பெற்றார்.

அப்போது இருவரும் சேர்ந்து கூண்டுக்கிளி எனும் திரைப்படத்தில் நடித்தனர்.  அந்த படத்தில் சிவாஜி வில்லனாக நடிக்க, எம் ஜி ஆர் கதாநாயக வேடத்தில் நடித்திருப்பார். வழக்கமாக நீண்ட வசனங்களைப் பேசுவதில் சிவாஜி கணேசந்தான் வல்லவர் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் அந்த வழக்கத்தை உடைக்கும் விதமாக எம் ஜி ஆர் ஒரு நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி சிவாஜியையே வியக்க வைத்துள்ளார்.

அந்த வசனம் எனன் தெரியுமா?

ஜீவா ஜீவா ஜீவாவா என் ஜீவாவா… நினைவு தெரிந்த நாள் முதல் என் உடம்பின் உயிராய்… உள்ளத்தின் எதிரொலியாய் கண்ணின் மணியாய் கருத்தின் உருவமாய் இருந்த என் ஜீவாவா….?!

இருளை ஊடுருவிச் செல்லும் மின்னலைப்போல உன் குரல் என் இதயத்தை ஊடுருவிச் செல்கிறதே…! ஜீவா… உதட்டால் அல்ல. உள்ளத்தால் பேசும் உன் பேச்சு…. உறங்கிக்கிடந்த என் உணர்ச்சியைத் தூண்டி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் இழுத்துச் செல்கிறதே ஜீவா…

காலம் நமது நட்பைப் பிரித்தாலும் அந்தக் காலத்தால் வளர்க்கப்பட்ட தாடியும் மீசையும் உன் கள்ளம் கபடமற்ற முகத்தை என் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு கணம் மறைத்தாலும் நினைத்ததை செய்து முடிக்கும் உன் நெஞ்சை… எதற்கும் அசைந்து கொடுக்காத உன் அகத்தை… பளிங்கு போல் எடுத்துக் காட்டுகிறதே ஜீவா…

ஜீவா எங்கிருந்தாய் இந்த நேரத்தில்… ஏன் வந்தாய் இந்தக் கோலத்தில்…! ஐயோ… வற்றாத ஜீவநதியான உன் வாழ்க்கைப் பாதையிலே சந்தித்து வசந்தகீதம் பாட வேண்டிய நான்… மரணப்பாதையிலே சந்தித்தும் மயான கீதமா பாட வேண்டும்? ஜீவா… ஜீவா… ஜீவா…!’

vinoth

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago