#image_title
MGR இந்தியாவில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர். தமிழ் சினிமா மறக்க முடியாத மகா நடிகர். இவரது முழு பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பதாகும். குடும்ப வறுமையின் காரணமாக எம்ஜிஆர் தனது மூத்த சகோதரர் எம் ஜி சக்கரபாணியுடன் இணைந்து நாடக குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று துணை நடிகராக நடித்து பின்னர் படிப்படியாக உயர்ந்து அதிரடி நாயகனாக பிரபலமானவர் MGR. 1950 60 70களில் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் MGR ஆகியோர் மூவேந்தர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளனர்.
சிவாஜி கணேசன் குடும்பம் சமுதாயம் ஆகிய படங்களிலும் ஜெமினி கணேசன் காதல் திரைப்படங்களிலும் MGR அதிரடி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்கள். MGRரின் படங்களில் சமூக நீதி கருத்துக்களும் திராவிட சிந்தனைகளும் அதிகமாக இருக்கும்.
சினிமாவில் இருக்கும்போதே திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றி வந்த MGR ஒரு கட்டத்திற்கு பிறகு தானே கட்சி ஆரம்பித்து அதில் வேட்பாளராக நின்று தமிழக முதலமைச்சராகவும் வெற்றி பெற்று திறம்பட ஆட்சி செய்தவர் MGR.
MGR அவர்களை எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட பிறகு அவரது உடல் நலனில் சர்ச்சை பின்னடைவு ஏற்பட்டது. அப்போது அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவிட்டு திரும்பி சென்னைக்கு வந்து அவரது வீட்டில் ஓய்வு எடுக்கும் போது நடந்த சம்பவத்தை பார்ப்போம்.
MGR அவர்களை தினமும் பரிசோதிக்க சித்த மருத்துவர் ஒருவர் வீட்டிற்கு வருவாராம். அப்போது MGR சித்த மருத்துவரிடம் இன்னைக்கு டிவில என் படம் போடுறாங்க போய் பாருங்க என்று கூறினாராம். உடனே சித்த மருத்துவர் என்கிட்ட கலர் டிவி இல்லையே அப்படின்னு சொல்லியிருக்கிறார். உடனே மனம் இறங்கிய MGR உதவியாளரை கூப்பிட்டு இவங்களுக்கு உடனே கலர் டிவி வாங்கி கொடு என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அங்கு வேலை பார்த்த 23 பேர் என அனைவருக்குமே கலர் டிவி வாங்கி கொடு என்று கூறினாராம். இப்படி அவரது வாழ்நாளில் அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து இருக்கிறார் MGR.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…