முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்ட அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மார்ச் 7-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக களம் காண உள்ள நிலையில், தேனி திமுகவில் புதிய சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.
இது குறிப்பாக, போடி தொகுதியில் போட்டியிட தயாராக இருந்த திமுக ஒன்றிய செயலாளர் லட்சுமணனுக்கு, ஓபிஎஸ்ஸின் வருகை பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ்ஸிடம் இருமுறை தோல்வியடைந்த லட்சுமணன், தற்போது அதே கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருப்பது தனக்கான வாய்ப்பைப் பறிக்கும் என அஞ்சுவதாகத் தெரிகிறது.
மேலும் மற்றொருபுறம், தேனி மாவட்ட அரசியலில் நீண்டகால எதிரிகளாகக் கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனும் ஓ. பன்னீர்செல்வமும் தற்போது ‘உடன்பிறப்புகளாக’ கைகோர்த்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லட்சுமணனுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் வெளியேறியதை அந்த கட்சியினர் கடுமையாக விமர்சித்தாலும், திமுகவில் அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ள முக்கிய பதவிகள் மற்றும் சபாநாயகர் பொறுப்பு குறித்த எதிர்பார்ப்புகள் தேனி மாவட்ட அரசியலைத் தற்பொழுது ரணகளமாக்கி வருகின்றன.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…