நடிகர் கமலஹாசனின் மெஹா ஹிட் படங்களில் மனதை விட்டு நீங்காத படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகளாகப்போகின்றது. இப்படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகையே திருப்பி போட்டது. இந்த படத்தில் கமலஹாசன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் ஜோடியாக நடித்திருப்பார்கள். 1988 ஆம் வருடம் ‘நாயகன்’ திரைப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று தேசிய விருதுகளையும் வென்று குவித்தது குறிப்பிடத்தக்கது.
#image_title
கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் காமெடியை வைத்து வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பஞ்ச தந்திரம். ஐந்து நண்பர்களால் நடிகர் கமல்ஹாசன் எப்படி பட்ட பிரச்சனைகளில் சிக்குகிறார் என்பதை காமெடியுடன் கூறிய இந்த திரைப்படம் 2002 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக, சிம்ரன் நடித்திருந்தார். மேலும் முக்கியமான ரோலில் தேவயானி, ரம்யா கிருஷ்ணன், நாகேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் கதை எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் விஸ்வரூபம் மற்றும் விஸ்வரூபம் -2. இந்த படத்தின் முதல் பாகமானது 2013 ஆம் வருடம் வெளியானது. இரண்டாம் பாகம், 2018 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பூஜா குமார் நடித்திருந்தார். மேலும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். தேசப்பற்றுடன் உருவான இந்த திரைப்படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியடைந்த இந்த படத்தில், கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து உருவான இந்தியன் 2 திரைப்படம் தோல்வியடைந்தது.
ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த விவாகரத்து வழக்கில், மனைவியின் மீதான கூடுதல் கணவரின் தாக்குதல் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவு…
பெங்களூருவில் ராபிடோ பைக்குகளில் பயணிப்பவர்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் முக்கியப்…
விஜயாப்பூரில் காலையில் நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நபர் விபத்து மரணம் அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட…
ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் 13 வயது இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…