திடீர் திருப்பம்… CM விஜய்க்கு வைகோ ஆதரவு…. ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த அந்த ஒரு வார்த்தை…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் ஆட்சி நிர்வாகம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வைகோ, “அருமையாக இருக்கு.. அவ்வளவு தான்..” என்று சுருக்கமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற மதிமுக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து தவெகவிற்கு ஆதரவாகப் பேசி வருவது தமிழக அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

சமீபத்தில் சேலத்தில் நடந்த குற்றச்சம்பவம் குறித்துப் பேசிய வைகோ, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை வழங்கும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். “இத்தகைய குற்றங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஆட்சியிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றவாளிகளை ஜாமீனில் நீதிபதிகள் வெளியே விடவே கூடாது. வாழ்நாள் முழுக்க ஜெயிலில் தான் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே, இந்த மிருகங்களுக்குக் கொஞ்சமாவது பயம் வரும். மத்திய அரசு இந்த சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தவெகவுடன் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசி வரும் சூழலில், மதிமுகவின் நிலைப்பாடு குறித்தும் வைகோ விளக்கமளித்தார். “நாங்கள் இன்னும் கூட்டணியைப் பற்றி யோசிக்கவே இல்லை, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க சாத்தூர் தொகுதி உள்ளிட்ட பல இடங்களில் நாங்கள் எவ்வளவு விசுவாசமாக வேலை செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு உழைத்தோம். திமுக கூட்டணியில் இருந்த பலர் இப்போது ஆட்சியில் கூட பங்கு பெற்றுவிட்டார்கள், ஆனால் நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. சமூக வலைத்தளங்களில் எங்களைப் பற்றிப் பேசினாலும் நாங்கள் அமைதி காக்கிறோம். வரும் 27ஆம் தேதி நடைபெறும் எங்கள் பொதுக்குழு கூட்டத்தில், அனைவரின் கருத்துக்களையும் கேட்டுத்தான் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” என்றார்.

மற்றொரு விவகாரமாக, திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசிய விவகாரத்தில் ஆளுநர் அர்லேக்கரை கண்டித்து மதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியதை வைகோ நினைவு கூர்ந்தார். இதனால் மதிமுக இந்துக்களுக்கு எதிரானது என எண்ணி, இந்து முன்னணியினர் மதிமுக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், “முற்றுகையிடட்டும், பெற வேண்டியதைப் பெற்றுக் கொடுப்போம். காவல்துறை இதற்கு அனுமதிக்கக் கூடாது, மீறி வந்தால் அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்” என எச்சரித்தார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதற்குத் துரை வைகோ ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இனிவரும் தேர்தல்களில் மதிமுக தனது சொந்தப் பம்பரம் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்ற முடிவோடு, தவெக நோக்கிய மதிமுகவின் இந்த நகர்வுகள் புதிய அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

3 minutes ago

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

7 minutes ago

என் மகளின் உயிரை எடுத்தவளுக்கு எப்படி ஜாமீன்?… கதறும் தாயின் கண்ணீருக்கு… நீதி வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

10 minutes ago

ரூ.70 கோடி பேரம்… ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக…. தவெக ஆட்சியை கவிழ்க்க மெகா பிளான்?…. குதிரை பேரத்தில் சிக்கிய தமிழக அரசியல்….!

தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…

10 minutes ago

நள்ளிரவில் வந்த ஹேப்பி நியூஸ்…. ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்…. கணக்கில் தடாலடியாக ஏறிய ரூ.12,000…. அரசு கொடுத்த அதிரடி தீபாவளி கிஃப்ட்….!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…

16 minutes ago

ஐயோ… பரசூட் விரியல… காப்பாத்துங்க… 2,000 அடி உயரத்தில் துடித்த… ரஷிய வீரர் கொடூர பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…

17 minutes ago