சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவிக நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் திமுக தலைமைடம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாகவும், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் தனது விருப்பத்தை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு சென்னையின் முதல் தலித் பெண் மேயராகப் பொறுப்பேற்ற பிரியா, கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக மக்கள் சேவையைத் தொடர அவர் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, வடசென்னைக்கு உட்பட்ட திருவிக நகர் தனித்தொகுதி என்பதால், அங்கு போட்டியிடுவது அவருக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
தற்போது திருவிக நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தாயகம் கவி இருந்து வருகிறார். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் திமுக தலைமையின் திட்டத்தின் அடிப்படையில், இந்த முறை மேயர் பிரியாவுக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. இதற்கேற்ப, மேயர் பிரியாவும் சமீபகாலமாக அந்தத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.
மேயர் பிரியா மட்டுமின்றி, சென்னை துணை மேயர் மகேஷ் குமாரும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள பல தொகுதிகளில் திமுக சார்பில் மேயர், துணை மேயர் மற்றும் சில முக்கிய கவுன்சிலர்கள் எனப் புதிய முகங்கள் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது சென்னை அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…