திரையுலகில் சோகம்..! ‘மேரி கோம்’ பட நடிகர் சுனில் தாபா மாரடைப்பால் காலமானார்..!!

Spread the love

பாலிவுட் மற்றும் நேபாளத் திரையுலகின் மூத்த நடிகரான சுனில் தாபா (Sunil Thapa), இன்று (பிப். 07) மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 68. 1981-ல் கமல்ஹாசன் நடித்த ‘ஏக் தூஜே கே லியே’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ், ஹிந்தி மற்றும் நேபாள மொழி உட்பட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் நடித்த ’10 எண்ணுறதுக்குள்ள’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது.

குறிப்பாக, பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி கோம்’ திரைப்படத்தில் அவரது பயிற்சியாளராக (Coach) சுனில் தாபா ஏற்று நடித்த கதாபாத்திரம் உலக அளவில் அவருக்குப் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. நேபாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராகத் திகழ்ந்த இவரது மறைவு, இந்திய மற்றும் நேபாளத் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்குத் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

1 minute ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

4 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

13 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

14 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

29 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

35 minutes ago