#image_title
மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். விவசாயம் செய்ய முடியாத வறட்சி காலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்கு சென்று வேடமிட்டு ஆடும் தொழில் செய்பவர். சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பை முடித்த பின்பு சென்னைக்கு வந்தார் மாரி செல்வராஜ்.
சென்னைக்கு வந்த மாரி செல்வராஜ் முதலில் எழுத்தாளராக பணிபுரிந்தார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் ஆவார். பிறகு பத்திரிகையாளராக சில வருடங்கள் பணி புரிந்தார். ஆனந்த விகடனில் மறக்க நினைக்கின்றேன் என்ற தொடரை எழுதியவர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் மாரி செல்வராஜ். அவரிடம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குனராக இருந்தார். மாரி செல்வராஜ் 2018 ஆம் ஆண்டு கதிர் மற்றும் ஆனந்தி நடித்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே நல்ல விமர்சனங்களை பெற்று அனைவரின் கவனங்களையும் ஈர்த்தார் மாரி செல்வராஜ். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த ஒரு மாணவன் கல்லூரியில் படிக்கும் போது அடுத்த சமூகத்தினரால் என்னென்ன இன்னலுக்கு ஆளாகிறான் என்பதை நம் கண் முன்னே எடுத்துக்காட்டி இருப்பார் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிரின் நடிப்பும் அபாரமாக இருந்தது. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு நடிகர் தனுசை வைத்து ‘கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ்.
கர்ணன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. இந்தப் படத்திலும் கீழ் சமூகத்தின் வாழ்க்கையே கூறி இருப்பார் மாரி செல்வராஜ். அடுத்ததாக வடிவேல் மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தற்போது ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். அந்த படம் வெளிவர இருக்கின்றது. இதற்கிடையில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். அப்படத்தின் இறுதி கட்ட பணிகளில் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவர் கூறியது என்னவென்றால், துருவ் விக்ரம் என்னை முழுவதுமாக நம்பினார். எனக்காக கடந்த இரண்டு வருடங்கலாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார். அவரது தந்தை சியான் விக்ரம் அவர்களையும் தாண்டி ஒரு படி மேல் சென்று இந்த பைசன் திரைப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார் துருவ் விக்ரம். அவர் பண்ணின Hardwork- ஐ பார்த்து நான் வியந்துட்டேன் என்று புகழ்ந்து பேசி உள்ளார் மாரி செல்வராஜ்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…