“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்”… வழியில் எங்கும் நிக்காதீங்க… தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட திடீர் தடை.. பறந்தது உத்தரவு….!

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும்” என்று கூறி, 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டார். திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

இந்த தேர்தல் போர்முரசு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த மண்ணான திருவாரூரில் இருந்து தொடங்குகிறது. வரும் மார்ச் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு ரத வீதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். சென்டிமென்ட் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருவாரூரில் இருந்து தனது வெற்றிக் பயணத்தை அவர் ஆரம்பிக்கிறார்.

திருவாரூரைத் தொடர்ந்து, ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையிலும், அன்று மாலை 5 மணிக்கு கரூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2 ஆம் தேதி ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் தனது தீவிரப் பிரச்சாரத்தை அவர் முன்னெடுக்க உள்ளார். அடுத்தடுத்த கட்டப் பிரச்சாரப் பயணங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியான கையோடு, களப்பணியில் திமுக வேகம் காட்டி வருவது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நேரத்திற்குள் பொதுக்கூட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி வழிநெடுகிலும் வேறு எந்த நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என திமுக தலைமை கழகம் கட்சியினருக்குக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பயணத் திட்டம் டெல்டா மற்றும் கொங்கு மண்டலங்களில் தற்போதே அரசியல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago