நீங்க ஓட்டுக்கு காசு கொடுக்கலாம், நாங்க டிக்கெட் வித்தா ஊழலா?…. விஜய்க்கு ஆதரவாக குதித்த மன்சூர் அலிகான்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக மற்றும் பிற அரசியல் கட்சியினர் விஜய்யின் சினிமா பட டிக்கெட் விலையைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். குறிப்பாக, “விஜய் தனது படங்களுக்கு ஆயிரக்கணக்கில் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதைக் கண்டுகொள்ளாமல், ஊழலைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்று திமுக மற்றும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், சினிமா விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகானிடம், விஜய்யின் பட டிக்கெட்டுகள் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தனது பாணியில் பதிலளித்த மன்சூர் அலிகான், “அவர்களுக்கு அந்த அதிகாரம் உள்ளது, விற்கிறார்கள்; மக்கள் விருப்பப்பட்டு வாங்குகிறார்கள், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், சினிமா டிக்கெட் விலையை ஊழலோடு ஒப்பிடுவது தவறு என்றும் அவர் வாதிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது ஓட்டுக்கு 2000 முதல் 5000 ரூபாய் வரை அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதைக் கடுமையாகச் சாடினார். “தேர்தலில் ஓட்டுக்காகக் கொடுக்கப்படும் அந்தப் பணம் மக்களின் வரிப்பணம் தானே தவிர, அரசியல்வாதிகள் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை; அதுதான் உண்மையான ஊழல்” என்று ஆவேசமாகக் கூறினார். மன்சூர் அலிகானின் இந்தத் துணிச்சலான கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

3 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

3 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

3 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago