கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் மன்சூர் அலிகான். அந்தத் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்ததால் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தார். குறிப்பாக நடிகர் விஜயகாந்தின் பெரும்பாலான திரைப்படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி சமூக சேவை, மக்கள் புரட்சியில் மற்றும் அரசியலில் அதிக ஆர்வம் காட்டியவர். ஒரு கட்டத்தில் தனியாக கட்சி தொடங்கினார். பல தேர்தல்களில் இவர் போட்டியிட்டிருந்தாலும் பெரிதாக வாக்குகளை பெறவில்லை.
சீமான் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கட்சியின் சார்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட தோல்வியடைந்தார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிகள் சுயேட்சையாக நின்ற தோல்வி அடைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அதிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சியில் நான் இருந்தபோது மாடு மாதிரி உழச்சி என்னோட கைக்காசை போட்டு தேர்தலில் போட்டி போட்டேன். ஆனால் என்னை நிக்க வச்சு பாஜகவிடம் பணம் வாங்கி இருக்கிறார் என்று அந்த கட்சியில் இருந்த ஒரு பெண் சொல்லி தான் எனக்கே தெரியவந்தது. அவரை நான் தப்பும் சொல்ல முடியாது. ஏனென்றால் கட்சி நடத்த பணம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் சீமானும் பாசிச சக்திகளுக்கு துணை போறாரு என்று மன்சூர் அலிகான் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…