தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி விவகாரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கோரியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் காங்கிரஸை விட்டு வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், ஆனால் காங்கிரஸ் தலைமை திமுக உடனான கூட்டணியை உறுதி செய்ததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்தச் சூழலில், திமுக நிர்வாகி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் திட்டம் தோல்வியடைந்ததால் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகப் பதிவிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான எதிர்வினையாற்றியுள்ளார். “அல்ற சில்ற ஐடி விங் (IT Wing) கனவு பலிக்காது கண்ணா! நான் ஒரு உண்மையான காங்கிரஸ்காரன்” என்று பதிவிட்டு, தான் கட்சியை விட்டு விலகப்போவதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…