கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த ராசாத்தி என்ற மலைவாழ் பெண்மணி, சங்கராபுரம் அருகே உள்ள அரூர் கிராமத்தில் குமார் என்பவருக்குச் சொந்தமான வெல்ல மண்டியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், மலைவாழ் மக்கள் இந்தப் பகுதியில் வேலை செய்யக் கூடாது எனக் கூறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், துணியால் சுற்றப்பட்ட பட்டா கத்தியை கொண்டு ராசாத்தியை அவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…
சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…
இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…
டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…
சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…