தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த திருவிழா கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மின்விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத் மற்றும் காமா ரெட்டி மாவட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹைதராபாத் நகரில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் விநாயக மண்டபம் அமைக்கும் பொழுது ஒருவர் பலியாகியுள்ளார். இதனையடுத்து பந்தளகுடா பகுதிகள் சிலையை தூக்கிச் செல்லும்போது மின்கம்பியில் உரசியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதில் மற்றொரு சம்பவத்தில் ராமந்தப்பூரில் கிருஷ்ணரின் தேரை இழுத்துச் செல்லும்போது மின்கம்பி உரசியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் படுகாயமாடைந்தனர். மேலும் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல் காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஆரேபள்ளி பகுதியில் விநாயகர் சிலையை தூக்கிச் செல்லும் போது லட்சுமி நாராயணன் (25)என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது மின்கம்பம் உரசி இரண்டு நாட்களில் ஒன்பது பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…