“எனக்கு ஆம்பள புள்ள தான் வேணும்”… மனைவியை கொடுமைப்படுத்தி சுடுகாட்டில் சடங்கு செய்த கணவன்… போலி சாமியாரை நம்பி செய்த கொடூர சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த துண்டேஷ் என்பவருடைய மனைவி ஜோதி (31). இவர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் துண்டேஷ் தன்னுடைய மனைவி ஜோதியை தனக்கு ஒரு ஆண் வாரிசு பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆண் குழந்தை பெற்று தராத விரக்தியில் அவர் தனது மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற வெறியிலிருந்து வந்த அவர் தன் பெற்றோரின் ஆலோசனையின் படி அருகே உள்ள பகுதியை சேர்ந்த மங்களா என்ற போலி சாமியாரை வீட்டுக்கு வரவழைத்து தனது பிரச்சனைகளை கூறியுள்ளார். ஜோதியின் உடலில் ஒரு பேய் இருப்பதாகவும் அதுதான் உனக்கு ஆண் வாரிசு பிறக்க விடாமல் தடுப்பதாகவும் போலி சாமியார் கூறியுள்ளார். மேலும் ஜோதியின் தலைமுடியை வெட்டி சுடுகாட்டில் கொண்டு சென்று எரித்து சடங்கு செய்ய வேண்டும், அப்படி செய்தால் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று போலி சாமியார் கூறியுள்ளார்.

இதனை நம்பிய துண்டேஷ், வீட்டிலிருந்த அவருடைய மனைவி ஜோதியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். பிறகு வீட்டிலிருந்த பிளேடால் ஜோதியின் தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டி உள்ளார். இதனை தடுக்க முயன்ற போது ஜோதியை சரமாரியாக அவர் தாக்கியுள்ளார். அதன் பிறகு ஜோதியின் வெட்டப்பட்ட தலை முடியை சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற அவர் அங்கு வைத்து முடியை தீவைத்து எரித்துள்ளார்.

இதனிடையே தலைமுடியை கொடூரமாக வெட்டியதால் தலையில் ரத்த காயம் அடைந்த ஜோதி அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரையும் அந்தப் பெண்ணின் மாமனார் மாமியார் மற்றும் சாமியாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

2 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

2 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

5 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

5 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago