#image_title
பிரபல நடிகரான மம்முட்டி தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த மௌனம் சம்மதம், அழகன் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினியுடன் இணைந்து மம்முட்டி தளபதி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மம்முட்டி ஒரு தமிழ் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.
அது பற்றி சித்ரா லட்சுமணன் உடன் இணைந்த பேட்டியில் நடிகர் பாவா லட்சுமணன் கூறியுள்ளார். பாவா லட்சுமணன் கூறியதாவது, மம்முட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஆனந்தம் படம் ரிலீஸ் ஆனது. கடந்த 2001-ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முதலில் நடித்த சரத்குமாரை தான் பேசினாங்க. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் எல்லாம் மாறிவிட்டது. மம்முட்டி கிட்ட போய் கதை சொல்ல போனோம்.
அவர் உட்கார்ந்து இருக்கிற ஸ்டைலு நம்மள மதிக்காத மாதிரியே இருக்கும். நாங்க கீழ உட்கார்ந்து இருப்போம். லிங்குசாமி சார் கதையை சொன்னாரு. இடையில டீ சாப்பிடலாமா என்று மம்முட்டி கேட்டார். பின்னர் நாங்கள் டீ குடிச்சதும் லிங்குசாமி கதையை சொல்லி முடித்தார். பின்னர் மம்முட்டி லிங்குசாமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாரு. உடனே சவுத்ரிக்கு போன் போடு அப்படின்னு சொன்னாரு. சவுத்ரி போன் எடுத்ததும் சார் இந்த படத்துல நான் நடிப்பேன்னு சொன்னாரு.
இந்த படத்துல நடிச்சதுக்காக மம்முட்டி ஒரு ரூபா கூட காசு வாங்கல. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல கதை கிடைச்சிருக்கு அப்படின்னு மம்முட்டி சாருக்கு ரொம்ப சந்தோஷம். சவுத்ரி சார் சம்பளம் பேசுவதற்காக வந்தார். அப்போது எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு. சம்பளம் நான் வாங்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாரு. கடைசியா சவுத்ரி மம்முட்டிக்கு கேரளா ரைட்சை கொடுத்தார். மம்முட்டி ஒரு அற்புதமான கலைஞர் என பாபா லட்சுமணன் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…
தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…