தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள முதல் குரூப் 1 தேர்வு அறிவிப்பு இதுவாகும். புதிய அரசால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும் என்று அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சுமார் 2 லட்சம் இளைஞர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், தற்போதைய அறிவிப்பில் துணை ஆட்சியர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு வெறும் 26 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் பணியிடங்கள் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த பத்தாண்டுகளில் 6 முறை நடத்தப்பட்ட தேர்வுகளில் மொத்தம் 545 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுக்கு சராசரியாக 55 பேர் தேர்வாகியுள்ள நிலையில், நடப்பாண்டு அறிவிப்பு இந்த சராசரியில் பாதிக்கும் குறைவாக உள்ளது. கடந்த 2019-இல் 139 பணியிடங்களும், 2024-இல் 90 பணியிடங்களும், குறைந்தபட்சமாக 2020-இல் 69 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது வெறும் 26 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுத் துறைகளில் குறைந்தது 5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதாகத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த தவெக அரசு, தொழில்நுட்பப் பணிகள் மற்றும் குரூப் 1 தேர்வுகளில் மிகக் குறைந்த இடங்களை அறிவித்துள்ளது இளைஞர்களின் நம்பிக்கையை உடைப்பதாக உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அரசு நிர்வாகத் திறனை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, இந்த குரூப் 1 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 26-லிருந்து குறைந்தது 100 ஆக உயர்த்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…