மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள சுருக்கெழுத்தாளர் (Stenographer) ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in மூலமாகவோ அல்லது ‘MySSC’ செயலி வாயிலாகவோ ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 15-ஆம் தேதியும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த மே 16-ஆம் தேதியும் கடைசி நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வுகள் கணினி அடிப்படையில் (CBT) நடைபெறும். தென் மண்டலத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மொத்தம் 26 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 9 மையங்களிலும், ஆந்திராவில் 12 மையங்களிலும், தெலுங்கானாவில் 4 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த மண்டலத்திற்கான தேர்வுகள் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, அத்தியாவசியக் கல்வித் தகுதி, தேர்வுத் திட்டம் மற்றும் கட்டண விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள், இந்தக் காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து, ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ள தேர்வுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…