கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விதார்த், அமலாபால், தம்பி ராமையா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனா. தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58 வது தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் தன்னுடைய அற்புதமான நடிப்பை நடிகர் விதார்த் வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறலாம்.
மைனா திரைப்படத்தில் தம்பி ராமையாவுக்கு அந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. கண்ணோடு காண்பதெல்லாம், கொக்கி உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருந்தாலும் இயக்குனர் பிரபு சாலமனுக்கு மைனா திரைப்படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. இப்படி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த மைனா திரைப்படம் வெற்றி பெறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து உதயநிதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது மைனா திரைப்படத்தின் காட்சிகளை தன்னிடம் போட்டுக் காட்டும்போது மிகவும் பிடித்து விட்டதாகவும் இந்த படம் கட்டாயம் வெற்றி பெறும் எனவும் கூறினேன். ஆனால் படம் முழுக்க முழுக்க வெற்றி பெற முக்கிய காரணமே கமல் சார் தான். ஏனென்றால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அந்த அளவிற்கு அவர் ஈடுபட்டார். இதனால்தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என உதயநிதி தெரிவித்துள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…