Categories: சினிமா

ஷாக்கில் ஜாய் கிரிசில்டா…! “அது என் குழந்தையாக இருந்தால்….?” புதிய அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்…!!

Spread the love

நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகார் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நாளிலிருந்து குழந்தையின் புகைப்படத்தையும் மாதம்பட்டி ரங்கராஜன் புகைப்படத்தையும் சேர்த்து வைத்து ஜாய் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். நேற்று மகளிர் ஆணையத்தின் முன் தன்னை இரண்டாவது திருமணம் செய்ததை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக ஜாய் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கூறியிருந்தார்.

மேலும் குழந்தைக்கு தந்தை தான்தான் என ஒப்புக்கொண்ட ரங்கராஜ் டிஎன்ஏ ஆதாரங்கள் தேவையில்லை எனவும் கூறியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்.

ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன்.

இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…

9 மணத்தியாலங்கள் ago

நிஜமான அதிசயம்..! ஐந்து நாட்களில் 4 குழந்தைகளை இயற்கையான முறையில் பெற்றெடுத்த பெண்.. மருத்துவ உலகையே வியக்க வைத்த உ.பி தாயின் அதிசயப் பிரசவம்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: டாஸ்மாக் கடைகள்… முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…

9 மணத்தியாலங்கள் ago

வாரண்ட் இல்லாமல் டிஎஸ்பி கேட்ச் பிடிக்க மாட்டார்..! முகமது சிராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…

9 மணத்தியாலங்கள் ago

வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்ல.. மனைவியையும், மகளையும் யூஸ் பண்ணிக்கோங்க… வீட்டு ஓனரிடம் கணவர் சொன்ன அதிர்ச்சி…!!

குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…

9 மணத்தியாலங்கள் ago

இனிமே வெயிட் பண்ண தேவையில்லை! பிஎஃப் பணத்தை எடுக்க சூப்பர் அப்டேட்.. புதிய ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ ரூல்ஸ்…!!

மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…

9 மணத்தியாலங்கள் ago