#image_title
தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
அதே காலகட்டத்தில் நடிகர் திலகமாக உருவாகி எம் ஜி ஆரின் போட்டியாளராக இருந்து தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார் சிவாஜி. எம் ஜி ஆரைப் போலவே சிவாஜியும் அரசியலுக்கு வந்தாலும், அவரால் எம் ஜி ஆர் போல வெற்றி பெற முடியவில்லை.
தமிழ் சினிமாவில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தது போலவே, அரசியலிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்தனர். சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். எம் ஜி ஆரோ, திமுகவில் தீவிரமாக இயங்கி சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் அதிமுகவைத் தொடங்கி முதல்வராகவும் ஆனார். ஆனாலும் அவர்களுக்குள் ஆழமான நட்புணர்வு இருந்தது. தன்னை விட மூத்தவரான எம் ஜி ஆரை, சிவாஜி அண்ணே என்றுதான் பாசத்தோடு அழைப்பாராம். அதே போல எம் ஜி ஆர், தம்பி கணேசா என்று அழைப்பாராம்.
எம் ஜி ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தபோது, அவரைப் பார்க்க சிவாஜி கணேசன் அங்கு சென்றார். அப்போது அவரிடம் எம் ஜி ஆர் “நான் உன்னிடம் ஒரு முக்கியமானப் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும். நான் இந்தியா வந்ததும் என்னை வீட்டில் வந்து பார்” என்று சொன்னாராம். சிவாஜியும் ‘சரி அண்ணே” என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் எம் ஜி ஆர் வீடு வந்து அவர் உடல்நிலை மோசமாகி மிக விரைவாகவே காலமானார். அதனால் சிவாஜிக்கு அவர் கொடுக்க இருந்த பொறுப்பு என்னவென்பது இப்போது வரை தெரியவில்லை.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…