Categories: சினிமா

புது கதைன்னு நான் எப்ப சொன்னேன்….! லியோ அந்தப் படத்தோட காப்பியா?…. சொல்லாமல் சொல்லிய லோகேஷ் கனகராஜ்…!!!!

Spread the love

தமிழ் சினிமாவில் எங்கு பார்த்தாலும் தற்போது லியோ திரைப்படத்தின் பேச்சு தான் பரபரப்பாக பேசப்பட்ட வருகின்றது. விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கக்கூடிய திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே அது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தும்.

அந்த அளவிற்கான எதிர்பார்ப்பு இந்த திரைப்படத்தின் மீதும் இருக்கின்றது. ஏனென்றால் இவர் இதற்கு முன்னதாக எடுத்த நான்கு திரைப்படங்களும் சூப்பர் டிப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது.

பொதுவாக ஏதாவது ஒரு திரைப்படம் ஹிட்டு கொடுத்தால் அந்த திரைப்படம் இந்த படத்தின் காப்பி, ஹிந்தி படத்தின் ரீமேக், ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என குறை கூறி வருவார்கள். அதிலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் எப்போதும் ஹாலிவுட் திரைப்படங்களின் சாயல் இருந்து கொண்டு தான் இருக்கும். இதைப்பற்றி இதுவரை லோகேஷ் எந்த ஒரு விளக்கமும் கொடுத்தது கிடையாது.

இவர் தற்போது இயக்கியுள்ள லியோ திரைப்படம் ஆங்கில படமான ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்ற திரைப்படத்தின் தழுவல் என்று முதலில் இருந்து கூறிவரும் நிலையில் தற்போது ஊடகம் ஒன்றிற்கு பேசிய லோகேஷ் கனகராஜ் அதை உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது லியோ படத்தின் கதை இதற்கு முன்பு வந்ததே இல்லை என்று நான் கூறமாட்டேன்.

பல சினிமாக்களில் ரசிகர்கள் பார்த்த கதை தான். அதை நான் என் பார்வையில் எப்படி சொல்லி இருக்கிறேன் என்பதுதான் விஷயம். இது ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான கதை தான். இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது அது புதுவித அனுபவத்தை கொடுக்கும். லியோ திரைப்படம் கண்டிப்பாக ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதை கேட்ட பலரும் அப்போ இந்த திரைப்படம் காப்பி தானா என்று கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

8 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

9 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago