#image_title
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்குகிறார். முன்னதாக லோகேஷ் இயக்கிய கைதி, மாநாடு, விக்ரம், லியோ ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்காக லோகேஷ் கவனமாக கதை, திரைக்கதை எழுதியுள்ளாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படபிடிப்பை முடித்ததும் லோகேஷ் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷை அழைத்து ஒரு மீட்டிங் நடத்தியுள்ளார்களாம்.
என்னவென்றால் பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தான் ரஜினி 171 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். பீஸ்ட் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங் செலவு 12 கோடி ரூபாய் அதிகரித்துவிட்டது. அதற்கு மனோஜ் பரமஹம்சா தான் காரணம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் நினைப்பதால் அவர் வேண்டாம் என கூறுகிறார்களாம்.
அதற்கு லோகேஷ் இந்த படத்தில் ஐ மேக்ஸ் கேமராவை பயன்படுத்த இருப்பதால் மனோஜ் தான் சரியான ஆள் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசி உள்ளாராம். ஏற்கனவே ஐமேக்ஸ் கேமராவை வெளிநாட்டிலிருந்து கொண்டு வர வேண்டும். அதனை ஆபரேட் செய்ய வருபவர்கள் விமான செலவு தங்கும் செலவு என பட்ஜெட் கூடிக்கொண்டே போகும். அதிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஈடுபாடு இல்லை. இதனால் லோகேஷ் கனகராஜ் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளார்.
#image_title
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…