#BREAKING: 16 மருந்துகளுக்கு தடை… சற்றுமுன் மத்திய அரசு அதிரடி உத்தரவு.. உடனே செக் பண்ணுங்க….!

Spread the love

இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 16 வகையான காம்பினேஷன் (FDC) மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடியாக உடனடித் தடை விதித்துள்ளது. மக்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளின் கலவைகளால் (Combinations) நோயாளிகளுக்கு எந்தவிதமான கூடுதல் சிகிச்சை பலனோ அல்லது மருத்துவ சாத்தியக்கூறோ இல்லை என மருத்துவ நிபுணர் குழு விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்தே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின்படி, குறிப்பிட்ட 16 மருந்துகளையும் தயாரிப்பதற்கோ, விற்பனை செய்வதற்கோ, விநியோகம் செய்வதற்கோ அல்லது நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்கோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் கீழ் வந்துள்ள மருந்துகள் அன்றாட வாழ்வில் பலரால் பயன்படுத்தப்படும் முக்கிய சிகிச்சை வகைகளைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தோல் மருத்துவத் தயாரிப்புகள் (Skin Creams), வலி நிவாரண மருந்துகள் (Painkillers), தசைப்பிடிப்பு நீக்கி மருந்துகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்து கலவைகள் (Anti-diabetic combinations) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotics) மருந்து அடிப்படையிலான தயாரிப்புகள் உள்ளிட்ட பல பிரிவுகள் இதில் அடங்கும். தேவையில்லாத மருந்து கலவைகளால் உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இனி மருத்துவர்களின் முறையான ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாக இத்தகைய காம்பினேஷன் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  1. அசிடைல் சாலிசிலிக் அமிலம் + எத்தோஹெப்டசைன்
  2. கற்றாழைச் சாறு + அலன்டோயின் + ஆல்பா டோகோபெரோல் அசிடேட் + டி-பாந்தெனால் + வைட்டமின் ஏ
  3. கற்றாழைச் சாறு + வைட்டமின் ஈ + டைமெதிகோன் + கிளிசரின்
  4. கற்றாழை + ஜோஜோபா எண்ணெய் + வைட்டமின் ஈ
  5. கற்றாழை + ஆரஞ்சு எண்ணெய்
  6. கற்றாழை + ஜோஜோபா எண்ணெய் + கோதுமை முளை எண்ணெய் + டீ ட்ரீ எண்ணெய்
  7. கற்றாழை + வைட்டமின் ஈ + மூலிகை கலவை
  8. டைசைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு
  9. டைசைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு + குளோர்டியாசெபாக்சைடு
  10. கிளைக்லாசைடு + குரோமியம் பிகோலினேட்
  11. பாராசிட்டமால் + லிக்னோகைன்
  12. அமோக்ஸிசிலின் + செராட்டியோபெப்டிடேஸ் + லாக்டோபேசிலஸ் ஸ்போரோஜென்ஸ்
  13. அமோக்ஸிசிலின் + க்ளோக்சாசில்லின் + லாக்டிக் ஆசிட் பேசில்லஸ் + செராட்டியோபெப்டிடேஸ்
  14. அமோக்ஸிசிலின் + செராட்டியோபெப்டிடேஸ்
  15. செஃபட்ராக்ஸிலில் + புரோபெனெசிட்செஃபுராக்ஸைம் + செராட்டியோபெப்டிடேஸ்
Nanthini

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

3 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

6 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

9 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

12 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

2 மணத்தியாலங்கள் ago