குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கிர் வனப்பகுதியை ஒட்டிய காம்பா தாலுகாவின் சதுரி கிராமத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஜியான் தேவ்குன்பாய் சீதா என்ற 5 வயது சிறுவன், இரவு நேரத்தில் தன் தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு பால் வாங்கச் சென்றிருக்கிறான். அப்போது இருட்டில் மறைந்திருந்த ஒரு பெண் சிங்கம், திடீரென பாய்ந்து தாத்தாவின் கையில் இருந்து சிறுவனைப் பறித்துக்கொண்டு காட்டுக்குள் ஓடியுள்ளது. தாத்தாவின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு தேடியபோது, சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
இந்தக் கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறையினர் மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனில், ஒரு பெண் சிங்கம் உட்பட மொத்தம் ஐந்து சிங்கங்களை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்தனர். பிடிபட்ட சிங்கங்களில் ஒன்றின் வாந்தியில் சிறுவனின் உடல் பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது, இது தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் நடக்கும் மூன்றாவது சிங்கம் தாக்குதல் சம்பவம் இது என்பதால், கிராம மக்கள் கடும் அதிர்ச்சியிலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.
காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த மோதல், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கங்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறை உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…
மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…
பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…
மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…