தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனராக ஆனந்தம், ரன், சண்டக் கோழி மற்றும் பையா ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் லிங்குசாமி. அதன் பின்னர்தான் அவரின் வீழ்ச்சி தொடங்கியது. அதற்கு முக்கியக் காரணமே அவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் படுதோல்வி அடைந்ததுதான்.
2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தைத் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தனர் சோஷியல் மீடியாவினர். பாட்ஷா கதையை உல்டா பண்ணி எடுத்துவிட்டு இயக்குனர் லிங்குசாமி ப்ரமோஷன்களில் கொடுத்த பில்டப்புகளை நம்பி வந்த ரசிகர்களுக்கு அஞ்சான் படம் வதைமுகாமாக அமைந்தது.
அந்த கடுப்பில் படத்தை கேலி செய்து மீம்களாக பறக்கவிட்டன. பட ப்ரமோஷனில் லிங்குசாமி பேசிய ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன்’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே லிங்குசாமியின் சினிமா கேரியரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் அவரால் இன்னும் மீண்டெழவே முடியவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய ஹிட் படமான ‘சண்டக் கோழி’ படம் பற்றி பேசியுள்ளார். சண்டக் கோழி படம் முதலில் விஜய்க்கு சொல்லப்பட்டு பின்னர் சூர்யாவுக்கு சொல்லப்பட்டு அதுவும் நடக்காமல் பின்னர் விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது.
அவர் பேசும்போது “சண்டக் கோழி படம் சூர்யா நடிப்பில் பாலா சார் தயாரிப்பில் உருவாக இருந்தது. நான் கதை சொன்னேன், அவர்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் அப்போது ரன் படம் ஹிட்டானதால் என்னுடைய சம்பளம் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு சென்றுவிட்டது. நான் கேட்கவில்லை என்றாலும், அவர்களாகவே ஒரு சம்பளம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் பாலா சார் என் சம்பளத்தைப் பார்த்து தயங்கினார். அதனால்தான் நான் விஷாலை வைத்து அந்த படத்தை எடுக்க ஆரம்பித்தேன்” எனக் கூறியுள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…