பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், ஷாருக்கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜவான். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தான் ஜவான் படத்தையும் இயக்கியிருந்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்க பிரியாமணி, யோகி பாபு சானியா ஐயப்பன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தியில் உருவாகிய இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இந்திய அளவில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் திரைப்படம் தற்பொழுது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று , வசூலையும் வாரி குவித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து மும்பையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர் அட்லி, ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி. அனிருத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஷாருக்கானிடம் I love you sir என கூற , இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ‘நானும் உங்களை நேசிக்கிறேன். நாம் திருமணம் செய்துக்கொள்ளலாம். இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடிப்போம்’ என்றார். அதற்கு விஜய் சேதுபதி, ‘ அதில் ஒன்றும் தவறில்லை சார்’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். இதோ அந்த வீடியோ…
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற 3-வது அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில்…
மெடாக் மாவட்டம் பாபன்னபேட்டை மண்டலத்திற்குட்பட்ட என்கேபள்ளி கிராமத்து விவசாய நிலங்களில் திடீரென சிறுத்தை ஒன்று நடமாடியது அப்பகுதி மக்களிடையே பெரும்…
திமுகவின் முக்கியப் பிரமுகரும், அணைக்கட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமாரின் காட்பாடியில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில்…
ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில், ஜி.எம்.ஓ.யு வளாகத்திலுள்ள சர்ரியா சந்தைப் பகுதியில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்குவது…
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் மீண்டும் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட்…