Categories: சினிமா

‘லியோ’ வெற்றி விழா மேடையில் ரஜினியை கலாய்த்த ரத்னகுமார்… எரியுற தீயில் எண்ணெய் ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்… என்ன செய்தார் தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

உலகம் முழுவதும் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனையும் படைத்தது. 250 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 12 நாள் முடிவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூவித்துள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகமாகும் என்றும் கூறி வருகின்றனர். எனவே நேற்று லியோ வெற்றி விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் கலந்துகொள்ள நிகழ்ச்சி நடந்தது.

 

இந்த வெற்றி விழாவில் விஜய், திரிஷா, மிஸ்கின், அர்ஜுன், கௌதமேனன், மன்சூர் அலிகான், பிக் பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டின் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமினாஸ், கலை இயக்குனர் சதீஷ்குமார் நடிகர் விஜய்யின் தாய் சோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இயக்குனரும் லியோவின் வசனகர்த்தாவில் ஒருவருமான ரத்னகுமார் விழாவில் பேசியது தற்பொழுது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

அதாவது அவர் இந்த விழாவில் ‘ எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ தானே வரணும்’ என கூறியிருந்தார். தற்பொழுது அவர் இதில் மறைமுகமாக நடிகர் ரஜினியை கூறுவதாக கூறி வைரலாகி வருகின்றனர் நெட்டிசன்கள். அதாவது, ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ‘காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். மற்ற பறவை விலங்குகளை தொந்தரவு செய்யும். ஆனால் பருந்து அமைதியாக இருந்து காகம் தொந்தரவு செய்தால் கூட வேகமாக உயிர பறந்து விடும். அது போன்று காகம் உயரமாக பறக்க ஆசைப்பட்டால் பறக்க முடியாது. கீழே வந்து விடும்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், எரியுற தீயில் எண்ணையை ஊற்றுவது போல ரஜினிகாந்தை குறிப்பிட்டு தான் ரத்னகுமார் பேசியுள்ளார் என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ சட்டை மாறன் ‘கைய குடுங்க சகல’ என மீம் போட்டு கலாய்த்துள்ளார். மேலும், தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜிடம் ‘அந்த ரத்னாவை படம் முடியுற வரை என் கண்ணில் படாமல் பார்த்துக்கோ’ன்னு சொல்லியதாகவும் ட்வீட் போட்டுள்ளார். அவரின் இந்த மீம்கள் தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago