Categories: சினிமா

என்னது..! நாளைக்கு ‘லியோ’ ரிலீஸ் இல்லையா…? வெளியான அதிரடி அறிவிப்பு… காரணம் இதுதானா…?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இத்திரைப்படமானது நாளை ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை லியோ திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் பல. முதலில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் இதைத்தொடர்ந்து ரிலீசான லியோ ட்ரைலர் ரசிகர்களுக்கு விருந்து வைத்தது.

இதைத்தொடர்ந்து வெளியானது 4 மணி காட்சி சிக்கல். தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.  லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கான அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பளித்தது.

தற்பொழுது ஒரு சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது . லியோ படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துடன், திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் லியோ படத்தின் ஒருவார வசூலில் லாப பங்கீடு தொடர்பாக இருதரப்பு இடையே சுமூக தீர்வு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாளை பல முக்கிய திரையரங்குகளில் லியோ படம் ரிலீசாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Begam

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

3 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

3 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago