தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையிடப்பட்டது. இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரைப்படம் வெளியாகி சில விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் நேற்று வெளிவந்த முதல் நாள் மட்டுமே உலக அளவில் 120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இதுவரை எந்த திரைப்படமும் இவ்வளவு வசூல் செய்தது கிடையாது.
தற்பொழுது நேற்று இத்திரைப்படத்தினை திரையரங்கிற்கு சென்று ரசித்த பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்ட்டு வருகிறது.அதன்படி கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கல்யாணி பிரியதர்சன் போன்றோர் வெற்றி தியேட்டரில் லியோ திரைப்படத்தை பார்த்துள்ளனர்.
பிக் பாஸ் கணேஷ் , நடிகர் ஷாம், நகுல் , நகுலின் மனைவி , நடிகை சம்யுக்தா , மன்சூர் அலி கான், நடிகர் கதிர் என பல திரைப்பிரபலங்கள் லியோ திரைப்படத்தை திரையரங்கில் கண்டு களித்துள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…