“சீக்கிரமா முடிச்சே ஆகணும்” TVK தலைவர் விஜய் போட்ட ஆர்டர்… தீயாய் இறங்கிய தவெக தொண்டர்கள்..!!

Spread the love

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் திரைக்கு முன்னும், பின்னும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2017 ஆம் வருடம் முதலே கூட்டணியில் இருந்து வருகிறது. அதேபோல பாஜகவில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தலை போலவே தனித்து நிற்பதில் உறுதியாக உள்ளார் சீமான்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தேர்தல் களத்திற்கு புதிது. திமுக, பாஜகவோடு கூட்டணி அமைக்கமாட்டோம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது. அப்படி என்றால் அதிமுகவோடு விஜய் கூட்டணி அமைப்பாரா? என்று கேள்வி எழுந்தது அதற்கும் வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் நன்கு முனை போட்டி உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில் தவெகவில் முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும் என்றும், நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்து ஆகவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ… பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த… இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…

4 minutes ago

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

18 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

27 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

35 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

13 மணத்தியாலங்கள் ago