“காங்கிரஸைத் தொட்டா திருப்பி அடிப்போம்”… பதவியேற்ற அன்றே மாணிக்கம் தாகூர் காட்டிய ஆக்ரோஷம்… சத்தியமூர்த்தி பவனில் பறந்த பொறி…!

Spread the love

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். காமராஜர், ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் புகைப்படங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்த பதவியேற்பு விழா எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், முன்னாள் மாநில தலைவர்கள் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கட்சியைப் பற்றி முழுமையாக அறிந்த ஒருவரை மேலிடம் தலைவராக நியமித்துள்ளதாகப் பாராட்டியதோடு, 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது தொண்டர்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். தொடர்ந்து பேசிய முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, இரு வருடங்களுக்கு முன்பு தான் எவ்வளவு மகிழ்ச்சியோடு பொறுப்பேற்றாரோ, அதைவிட இருமடங்கு மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் மாணிக்கம் தாகூரிடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பதாகக் கூறி, தனக்கு ஒத்துழைப்பு நல்கிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்களை மீட்டெடுத்த பெருமை செல்வப்பெருந்தகையையே சாரும் என்று புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் அவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

தனது ஏற்புரையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், “141 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணி கொண்ட கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் தங்களது ஈகோவை விட்டுவிட்டு உழைக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான தற்போதைய கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கௌரவமான இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸையோ அல்லது ராகுல் காந்தியையோ யார் விமர்சித்தாலும், அதற்குத் துணிச்சலாகத் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார்.

Visaka

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

7 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

7 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

7 மணத்தியாலங்கள் ago