பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி, தனது பகுதியில் வசிக்கும் தனுஷ் என்ற இளைஞரை ஒரு ஆன்மீக விழாவில் சந்தித்துக் காதலித்து வந்தார். ஆனால், தனுஷிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் அண்மையில்தான் அமிர்தாவிற்குத் தெரியவந்தது. இந்த உண்மை மறைக்கப்பட்டதால் மனமுடைந்த அமிர்தா, தனுஷுடனான தனது காதல் பந்தத்தை உடனடியாகத் துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷின் தம்பியான சூர்யா, சம்பவத்தன்று கோடஹள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அமிர்தாவை வழிமறித்துக் காதலை முறித்தது குறித்துக் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோதிலும், வாக்குவாதம் முற்றவே சூர்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அமிர்தாவைச் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோட முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் 48 மணி நேரம் உயிருக்குப் போராடிய அமிர்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் திட்டமிட்ட கொலை தொடர்பாகச் சூர்யாவை மட்டுமின்றி, கொலைக்குத் தூண்டுதலாக இருந்த அவரது அண்ணன் தனுஷையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய…
பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய உணவுப் பொருட்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயதார்த்தம்…
பீகார் மாநிலத்தின் ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைத் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள்…
ஒரு இந்து பிராமணப் பெண்ணான அவள், அன்றைய இரவு கடுமையான பசியின் காரணத்தால் ஸொமேட்டோ செயலியைத் திறந்து உணவருந்த முடிவு…
டேராடூன் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. நியூ கேன்ட் சாலை, விஜய் காலனியைச்…
வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட…