#image_title
திரை உலகில் தனது அழகால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் நடிகை லைலா. முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், விஜயகாந்த், பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்டருடன் இணைந்து லைலா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன் முதலில் கள்ளழகர் திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு தில், தீனா, உன்னை நினைத்து, நந்தா, பிதாமகன், பரமசிவன், ஜெயசூர்யா உள்ளிட்ட ஏராளமான படங்களில் லைலா நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான மெஹதீன் என்பவரை லைலா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லைலா திரைப்படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் லைலா நடித்த தீனா, உன்னை நினைத்து ஆகிய படங்கள் லைலாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய லைலா அல்டிமேட் ஸ்டார் அஜித் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறினார். அதற்கு என்ன காரணம் என கேட்டபோது இதுவரை ஒரு முறை கூட அஜித் எனக்கு பிரியாணி சமைத்து கொடுத்ததே இல்லை.
அதனால் இன்று வரை அவர் மீது நான் கோபத்தில் இருக்கிறேன். அவரோட இணைந்து நடித்த அனைவருக்குமே அவர் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார். ஆனால் எனக்கு பிரியாணி சமைத்து கொடுத்ததே இல்லை. இதனால் அவர் மீது கோபத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலாக கண்டிப்பாக அஜித் உங்களுக்கு பிரியாணி சமைத்துக் கொடுப்பார் கவலைப்பட வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…