Categories: சினிமா

இந்தியன் படத்தாலதான் அவ்வை சண்முகி உருவானது… சீக்ரெட்டைப் பகிர்ந்த கே எஸ் ரவிக்குமார்!

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதே போல கமல்ஹாசன் வெறுமனே நடிப்போடு தன்னை குறுக்கிக் கொள்ளாமல் திரைக்கதை, இயக்கம், பாடல் எழுதுதல், பாடுதல் மற்றும் படங்கள் தயாரித்தல் என பலதளங்களில் விரிவாக இயங்கியுள்ளார். அதே போல நடிப்பிலும் பல பரிமாணங்களைக் காட்டியுள்ளார். அவரின் வித்தியாசமான நடிப்பில் உருவான திரைப்படம்தான் ‘அவ்வை சண்முகி’. அந்த படத்தில் கமல்ஹாசன் பெண்ணாக மேக்கப் போட்டு நடித்தார்.

இந்த படம் பற்றி அந்த படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “கமல் சார் இந்தியன் படம் நடித்துக் கொண்டிருக்கும்போது ப்ராஸ்தட்டிக் மேக்கப் பற்றி எல்லாம் சொன்னார். நான் அவரிடம் அப்படி மேக்கப் போட்ற மாதிரி நம்ம ஒரு படம் பண்ணலாம் சார் என்றேன். அப்போது அவர் ஒரு ஹாலிவுட் படக் கதையை சொல்லி அதை நாங்கள் மாற்றி உருவாக்கியதுதான் அவ்வை சண்முகி.

அதில் நான் ஒரு காட்சி சொல்வேன். கிரேஸி மோகன் ஒரு காட்சியை சொல்வார். இப்படியே ஆளுக்காள் ஒவ்வொரு காட்சியாக சொல்லி மொத்த படத்தின் திரைக்கதையும் உருவானது.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

55 seconds ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

5 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

9 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

14 minutes ago