Categories: சினிமா

பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த படம்.. லேட்டா வந்தாலும் சூப்பர் ஹிட் தான்..!

Spread the love

தமிழ் திரை உலகில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நுழைந்தவர் தான் நடிகர் அஜித். சாக்லேட் பாயாக நடிக்க தொடங்கி பல திரைப்படங்களில் அப்படியே நடித்து வந்தார்.  இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே காட்பாதர் என்ற பெயரிலே அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ஒரு காலகட்டத்திலே வரலாறு என்ற பெயரில் வெளியானது.

2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரை சந்தித்த தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, அஜித் எங்கள் நிறுவனத்திற்கு 100 நாட்கள் கால் சூட் கொடுத்துள்ளார் அவரை வைத்தே நீங்கள் தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கே எஸ் ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார் அஜித்தை சந்தித்தபோது அவரும் நீங்க கதையை தயார் பண்ணுங்க நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து காட்பாதர் கதை உருவானது. அதன் பிறகு அஜித்தை வைத்து ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் கிட்டத்தட்ட அதன் பிறகு ஆறு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனிடையே படத்தை தயாரிப்பதாக இருக்க தயாரிப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் அஜித் இடையே மிகப் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது. அஜித்தை வைத்து பல திரைப்படங்களை தயாரித்தவர் தான் எஸ் எஸ் சக்கரவர்த்தி. இவருக்கும் அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அந்த காலகட்டத்தில் பல விநியோகஸ்தர்களை பாதித்தது.

ஏனென்றால் பல விநியோகஸ்தர்களுக்கு எஸ்எஸ் சக்கரவர்த்தி பணம் தர வேண்டி இருந்தது. அஜித்தை வைத்து படம் எடுக்கவில்லை என்றால் எப்படி அந்த பணத்தை எவ்வாறு திருப்பித் தருவார் என்று யோசித்து தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம் நடத்தப்பட்டு இவர்களுடைய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருவழியாக பிரச்சனை சுமூகமாக முடிந்த நிலையில் அதன் பிறகு அஜித் சக்கரவர்த்திக்கு கால் ஷூட் கொடுத்து காலதாமதமாக உருவான திரைப்படம் தான் வரலாறு. காலதாமதமாக வெளியானாலும் கே எஸ் ரவிக்குமார் கதை அமைத்திருந்த விதம் படத்தை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்தி சென்றது என்று தான் கூற வேண்டும்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago