கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியில், கிருஷ்ணசாமி என்பவர் தனது 90 வயது தாயார் சின்னம்மாவுடன் வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாகப் படுத்த படுக்கையாக இருந்த சின்னம்மா சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். தாயின் பிரிவைத் தாங்க முடியாத கிருஷ்ணசாமி, அவரது இறப்பை வெளியில் யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியமாக மறைத்துள்ளார். சடலம் கெட்டுப்போகாமல் இருக்க தினமும் ஈரத்துணியால் உடலைத் துடைத்து, பவுடர் பூசி, வெள்ளைத்துணியால் மூடி, அதனை ஒரு தெய்வமாகப் பாவித்து நாட்கணக்கில் பூஜை செய்து வந்துள்ளார்.
இதனிமயைல், பாட்டியைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த பேத்தி, அங்கே பாட்டியின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். உடனடியாகக் காவல் துறைக்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ணசாமி கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு உரிய மனநல சிகிச்சைக்காக அனுமதித்தனர். தாயின் உடலை வைத்து மகன் பூஜை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…
ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…