Categories: CINEMA

”என் பையனோட ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் பாத்தீங்களா?” – சத்யராஜ் கேட்ட கேள்விக்கு கவுண்டமணி என்ன சொல்லிருப்பாருன்னு நெனைக்குறீங்க!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.  அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் அவரின் தனித்துவ நடிப்பை கோடிட்டு காட்டின. அதன் பின்னர் அவரின் மார்க்கெட் உச்சத்தை நோக்கி சென்றது. செந்திலும் அவர் கூட்டணி அமைத்து உருவாக்கிய லாரல் ஹார்டி வகைக் காமெடி அழியாப் புகழை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.

கவுண்டமணி எல்லா வகையிலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானர். ஊடகங்களை வெகு அரிதாகதான் சந்தித்து பேட்டிக் கொடுத்துள்ளார். யாராவது பேட்டிக்காக நச்சரித்தால் “தம்பி இங்க பாரு… என்னோட வேல நடிக்குறது… உன்னோட வேல படத்த பாக்குறது. அதோட முடிச்சுக்குவோம்.. இந்த பேட்டி எல்லாம் தேவையில்லாதது…” என நாசூக்காக மறுத்துவிடுவாராம்.

கவுண்டமணி எப்படி படத்தில் சக நடிகர்களைக் கலாய்த்து கவுண்டர் கொடுக்கிறாரா அதே போலதான் நிஜ வாழ்க்கையிலும் எதையும் ஓப்பனாக பேசிவிடுவார். இதைப் பலரும் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் கவுண்டமணிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சத்யராஜ் தன்னுடைய மகன் சிபிராஜை கவுண்டமணி எப்படி கலாய்த்தார் என்று கூறியுள்ளார்.

ஒரு நேர்காணலில் “நான் ஒரு முறை கவுண்டமணி அண்ணனோடு பேசிக் கொண்டிருக்கும் போது ‘அண்ண என் பையன் சிபி  ‘நாய்கள் ஜாக்கிரதைனு ஒரு படம் நடிச்சிருக்கான், பாத்தீங்களா? எப்படி இருக்கு?” எனக் கேட்டேன். அதற்கு அவர் “அந்த நாய் நல்லா நடிச்சுருக்குப்பா” என சொல்லிவிட்டு போய்விட்டார்” எனக் கூறியுள்ளார். சிபிராஜுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக நாய்கள் ஜாக்கிரதை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

10 நிமிடங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago