“நல்லா பேசுனா கேமரா திரும்பாதா?”…. ஊடகங்கள் & விஜய்யை ஒரே மேடையில் வெளுத்து வாங்கிய DMK… கே.என்.நேரு பரபரப்பு பேச்சு….!

Spread the love

விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையிலும், தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையிலும் திருச்சியில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். திருச்சி மரக்கடை பகுதியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மற்றும் முரசொலி மாறன் ஆகியோரை கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்க்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.என்.நேரு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் மிசா சட்டம் எனக் கூறி முதல்வர் திசை திருப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், “சினிமாவில் வசனம் பேசுவது போல் பேசாமல் நாங்கள் கேட்கும் நேரடிக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். நாங்கள் அமைதியாகப் பேசினால் ஊடகங்களின் கேமராக்கள் எங்கள் பக்கம் திரும்புவதில்லை; எதிர்ப்பைப் பதிவு செய்தால் மட்டுமே கவனம் கிடைக்கிறது. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் உண்மையல்ல,” என்று அவர் சாடினார்.

மிசா சட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் குறித்த விவாதத்திற்குப் பதிலளித்த நேரு, ஸ்டாலின் மிசாவில் சிறைசென்றதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் அரசாங்கத்திடமே கைவசம் உள்ளன என்றும், அமைச்சர் நிர்மல் குமார் அதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்றும் காட்டமாகக் குறிப்பிட்டார். மேலும், வரும் இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் எனக் கூறிய அவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மீண்டும் திமுகவே வெற்றி பெற்று தன் பலத்தை நிருபிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், இந்தியாவிலேயே அனைத்துக் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரே தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகப் பாராட்டினார். திமுக என்றைக்குமே தன் தோழமைக் கட்சிகளை விட்டுக்கொடுத்ததில்லை, இனியும் விட்டுக்கொடுக்காது என்று தெளிவுபடுத்திய அவர், கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதற்கு திமுக காரணமல்ல என்றும், தவெக தலைவர் விஜய் பாஜகவை நேரடியாக விமர்சிக்கத் தயங்குவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டுக் காட்டினார்.

Nanthini

Recent Posts

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

4 minutes ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

5 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… பசியால் வாடும் சிறு குழந்தை… வன்முறை தாக்குதல்… சமூகத்தின் இழிவு செயல்… நெட்டிசன்கள் கொந்தளிப்பு…!!

பசியால் வாடும் ஒரு சிறு குழந்தை, உயிர் பிழைப்பதற்காக ஒரு துண்டு ரொட்டியை நாடும்போது அதன் மீது வன்முறையைப் பிரயோகிப்பது…

16 minutes ago

ஹலோ… கேமராவை ஆஃப் பண்ணுங்க… வங்கியில் நியாயத்தைக் கேட்ட… பெண்ணை மிரட்டிய ஊழியர்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

மறு கேஒய்சி படிவத்தைச் சமர்ப்பித்தும் கணக்கு புதுப்பிக்கப்படாமல் தாமதமடைவது, வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் சந்திக்கும் மிகப்பெரிய சிரமங்களில் ஒன்றாகும். வங்கி…

21 minutes ago

“வானில் வட்டமிட்டு சுழன்ற ஹெலிகாப்டர்…” நொடிப் பொழுதில் கட்டுப்பாட்டை இழந்து காற்றில் ஆபத்தான ஆட்டம்… சாதூர்யமாக செயல்பட்ட விமானிகள்…. வைரல் வீடியோ…!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் வால் பகுதியில் இருந்த 'டெயில் ரோட்டார்' அமைப்பில் திடீரென ஏற்பட்ட மெக்கானிக்கல் பழுது…

21 minutes ago

ஆம்புலன்ஸுக்கு நேரமில்ல!… நடுரோட்டில் நொறுங்கிய பைக்… துடிதுடித்த இளைஞர்… அடுத்த நொடியே காரில் பறந்த காக்கிகள்… நெஞ்சைத் தொடும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர்…

25 minutes ago