“டேய் என்னடா பண்றீங்க… மேடையிலேயே மணமகளுக்கு லிப்-லாக்”… கடுப்பான ஐயர் செய்த காரியம்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்….!

Spread the love

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற திருமண விழாவொன்றில், சினிமா பாணியில் மணமகன் தனது மணமகளுக்கு முத்தம் கொடுத்ததும், அதனை புரோகிதர் தடுத்து நிறுத்தியதுமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் மணமேடையை நோக்கி வரும்போது, உணர்ச்சிவசப்பட்ட மணமகன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று மணமகளுக்கு பூங்கொத்து கொடுத்து, அவர் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

சினிமா காட்சியைப் போன்ற இந்த ரொமாண்டிக் தருணத்தைக் கண்டு அங்கிருந்த உறவினர்களும் நண்பர்களும் உற்சாகமடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், அங்கு சடங்குகளைச் செய்யத் தயாராக இருந்த புரோகிதர், மணமக்களின் இந்தச் செயலைக் கண்டு கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார். கொஞ்சமும் தாமதிக்காமல் மணமக்களுக்கு இடையே வந்து அவர்களைப் பிரித்து நிறுத்திய அவர், இது போன்ற செயல்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பகிரங்கமாக சத்தம் போட்டார்.

மேலும், அந்த அழகான தருணத்தைப் படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்களையும் வீடியோகிராபர்களையும் கேமராவை நிறுத்துமாறு புரோகிதர் எச்சரித்தார். மணமகளின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், “எங்கள் மகிழ்ச்சியான தருணத்தில் அந்த புரோகிதர் ஒரு கபாப்பில் சிக்கிய எலும்புத் துண்டைப் போல (Kabab Mein Haddi) குறுக்கிட்டு எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டார்” என்று மணமகள் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் இது இரண்டு விதமான கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், “திருமணம் என்பது மணமக்களுக்கானது, அவர்கள் அன்பை வெளிப்படுத்துவதில் தப்பில்லை” என்று மணமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பினரோ, “திருமண மேடை என்பது புனிதமானது, அங்கு பாரம்பரியத்தையும் கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டும்” என்று புரோகிதரின் செயலை நியாயப்படுத்தி வருகின்றனர்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

11 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago