#image_title
தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவரிடம் இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். குறிப்பாக அவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவின் குற்றச்சாட்டு வைத்து அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு சென்றது. இன்னும் அந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.
அதே சமயத்தில் அவரது உடல் எடையும் அதிகரித்திருந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்றே பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் அதன் பின் தனது உடலை கட்டுக்குள் கொண்டு வந்து “ஈஸ்வரன்”, “மாநாடு” போன்ற திரைப்படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அவர் என்னதான் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அவரை பிரச்சனைகள் விட்டபாடு இல்லை.
சிம்பு இன்று சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் இருக்கும் மார்க்கெட்டில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்கள் கொடுப்பதில்லை. அதிலும் அவர் தொடங்கி நடித்த பல படங்கள் ட்ராப் செய்யப்பட்டன. அதில் வேட்டை மன்னன், கெட்டவன், கான் என பல படங்கள் அடக்கம்.
இதில் கெட்டவன் படத்தின் இயக்குனராக அறிவிக்கப்பட்ட ஜி டி நந்து சமீபத்தில் சிம்புவின் அழிச்சாட்டியம் குறித்து பேசியுள்ளார். அதில் “மன்மதன் திரைப்படத்தில் எப்படி கதை, திரைக்கதையில் தன் பெயரை சிம்பு போட்டுக்கொண்டாரோ, அதுபோல கெட்டவன் படத்திலும் மூக்கை நுழைத்தார். கதைக்குள் புகுந்து அதை மாற்றினார். கிராமத்துக் கதையாக இருந்ததை எல்லாம் சிட்டி பேஸாக மாற்றினார். ஒரு கட்டத்தில் இந்த கதை வெற்றி பெறாது என்ற அளவுக்கு எனக்கே தோன்றியது. நான் அதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.” எனப் புலம்பியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…