Categories: CINEMA

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.  இவர் பாடகி மட்டுமில்லை. ரேடியோ ஜாக்கி, நடிகை, பத்திரிக்கையாளர் எழுத்தாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். இவரும் நடிகர் கார்த்திக் குமாரும்  சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமண பந்தத்தில் இணைந்தனர். பாடகியாக நல்லபடியாக சென்று கொண்டிருண்ட சுசித்ராவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன.

2017 ஆம் ஆண்டு சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின. இதையெல்லாம் சுசித்ராதான் வெளியிட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சுசித்ரா, தன்னுடைய கணவர் கார்த்திக் குமார்தான் தன்னுடைய டிவிட்டர் பாஸ்வேர்டை திருடி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார் என்று பகீர் குற்றச்சாட்டை வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, சிம்பு மற்றும் வெங்கட்பிரபு என பல முன்னணி நடிகர் நடிகைகளைப் பற்றி பல பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில்  போதைக் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது என கூறி பீதியைக் கிளப்பியுள்ளார்.

இந்நிலையில் சுசித்ராவின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “சுசித்ரா பேசுவதே தேவையில்லாதது. அவரைப் பற்றி நான் இப்போது பேசுவது அதை விட தவறானது. அவரின் பேச்சுகளைப் பார்க்கும்போது அவரின் உள்ளம் சிதைந்து போயிருப்பது தெரிகிறது. அவருக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான இடம் கேமரா இல்லை.

நாம் கேட்பது எல்லாம் சுசித்ரா சொல்லும் ஒரு பக்கம் மட்டும்தான். அதை வைத்து நாம் தீர்ப்பெழுத முடியாது. அவங்க கார்த்திக்க திருமணம் செய்யும்போது அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் உயிரோட இல்ல. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே தற்கொலை பண்ணிகிட்டவங்க. அதனால் அவங்களுக்குள்ள நிறைய குடும்ப போராட்டங்கள் இருந்துள்ளது.

கார்த்திக்க பத்தி அவங்க ஓரினச்சேர்க்கையாளர் குற்றச்சாட்ட வைக்குறாங்க… அத கண்டுபிடிக்க அவங்களுக்கு 13 வருஷம் ஆச்சா? எத்தனை நாளுக்கு அவங்க வெகுளியா இருந்திருப்பாங்க?. அவங்க சொல்றமாதிரி கார்த்திக் குமார் இவங்கள ஏமாத்திட்டார்னு வச்சிகிட்டாலாலும், இப்போ கார்த்திக் குமார் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி அவங்களோட சந்தோஷமா இருக்காங்களே… அவரோட ரெண்டாவது மனைவி கார்த்திக் குமாருக்கு ஆதரவா இருக்காங்களே?.  அப்ப நாம எத நம்புறது” என பல அடுக்கடுக்கான கேள்விகளை சுசித்ரா மீது வைத்துள்ளார்.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago