ஒன்னு செத்துப்போச்சி… ஒன்னு அமித்ஷாவின் மார்வாடி கடையில அடமானத்துல இருக்கு… அதிமுகவை நார் நாராக கிழித்த கருணாஸ்.!!

Spread the love

சிவகங்கையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் கருணாஸ், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடினார். “தாமரை மலருக்குக் கீழே இரட்டை இலை படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்த அவர், ஒரு இலை அமித்ஷா எனும் மார்வாடி கடையிடம் அடமானத்திற்குப் போய்விட்டதாகவும், மற்றொரு இலை இத்துப்போன ஒருவரிடம் சிக்கி ‘செத்த இலையாக’ மாறிவிட்டதாகவும் பகீர் விமர்சனத்தை முன்வைத்தார். சிவகங்கை தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முந்தைய அதிமுக எம்எல்ஏ செய்யத் தவறிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கனவே ஜான்சி ராணி என்பவர் ஏர்கலப்பை சின்னத்துடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று திடீர் திருப்பமாக அதே கட்சியின் சார்பில் சுகன்யா என்பவர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். சீமானின் உத்தரவுப்படியே தான் போட்டியிடுவதாகச் சுகன்யா அறிவித்தது கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரண்டு பேர் மனுத்தாக்கல் செய்துள்ள இந்தத் திடீர் வேட்பாளர் மாற்றத்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் மனுத்தாக்கல் செய்த ஜான்சி ராணிக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் சிவகங்கையில் கருணாஸின் காரசாரமான பேச்சும், பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி குழப்பமும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

6 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

7 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

7 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

7 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

7 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago