சினிமா பாடல்கள் மூலமாக தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் தான் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், கஷ்டங்கள் மற்றும் மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கியிருந்தார். அதனைப் போலவே மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது.
அதனைப் போலவே கிளாசிக் சினிமாவை எடுத்துக் கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது. இப்படியான நிலையில் கண்ணதாசன் சினிமாவில் பிரபலமாக இருந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜரும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் பேசாமல் இருந்தனர். இருவருக்கும் இடையேயான நட்பு பிரிந்த நிலையில் கண்ணதாசன் மீண்டும் காமராஜருடன் சேர பல முயற்சிகளை எடுத்தும் எதுவும் கை கொடுக்கவில்லை.
அதன்பிறகு யோசித்த கண்ணதாசன் ஒரு பாடல் மூலமாக காமராஜருக்கு தூது விடலாம் என்று யோசித்தார். காமராஜரின் அம்மா பெயர் சிவகாமி. அதனால் அவருடைய பெயரை பயன்படுத்தி கடந்த 1967ஆம் ஆண்டு ஜெய்சங்கர் மற்றும் கே ஆர் விஜயா ஆகியோர் நடிப்பில் வெளியான பட்டினத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருந்தார். அந்தப் பாடல் தான் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” என்ற பாடல். அதன் பிறகு காமராஜர் மற்றும் கண்ணதாசன் இருவரும் சேர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…