தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக கொடிகட்டி பறந்த கவிஞர் கண்ணதாசனே வாலியை வெகுவாக பாராட்டிய ஒரு சம்பவம் நடந்துள்ளது. தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து காமர கண்ணன் தயாரித்த திரைப்படம் தான் பச்சை விளக்கு. பீம்சிங் இயக்கிய இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிவாஜி கணேசன் நடித்த எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் விஜயகுமாரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு இசையமைப்பதற்காக எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணதாசன் பாடல்களுக்கான டியூன் போட்டு விட்டியா என்று எம் எஸ் விஸ்வநாதன் பார்த்து கேட்க அவரும் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.
எம் எஸ் விஸ்வநாதன் மெட்டு போட்டதும் உடனே தன் பக்கத்தில் இருந்த உதவியாளர் பஞ்சு அருணாச்சலத்தை பார்த்து பாடல் வரிகளை சொல்கிறேன் எழுதிக்கோ என்று கண்ணதாசன் கூறியுள்ளார். பிறகு பொன்மன செண்டு முகமாக என்ற பாடல் வரிகளை கண்ணதாசன் கூறி முடித்ததும் பாடல் வரிகள் அருமையாக அமைந்துள்ளது என்று கூறி எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசனை பாராட்டினார். அவர் பாராட்டியதும் தலைகால் புரியாமல் இருந்த கண்ணதாசன் அடுத்த பத்து நிமிடத்தில் மொத்த பாடல் வரிகளையும் எழுதி முடித்து விட்டார். பச்சை விளக்கு திரைப்படம் ஏ பி மையப்ப செட்டியார் ஆலோசனையின் பெயரில் உருவானது என்பதால் பாடல் வரிகளை அவரிடம் கேட்டுவிட்டு பிறகு பதிவு செய்யலாம் என்று யோசித்த கண்ணதாசன் அவரிடம் சென்று பாடல் வரிகளை கொடுத்துள்ளார்.
அனைவருமே பாராட்டிய இந்த பாடல் வரிகள் மெய்யப்ப செட்டியாருக்கு ஏற்புடையதாக இல்லை. பல்லவி ரொம்ப பெரிதாக இருக்க இப்படி இருந்தா மக்கள் மத்தியில் சென்றடையாது என்று கூற கண்ணதாசன் நான் இவனுக்கு ஏற்றபடி தான் பாடல் எழுதினேன் என்று கூறினார். அதைத்தான் நானும் சொல்கிறேன் டியூனையே மாற்ற வேண்டும் என்று மையப்ப செட்டியார் சொல்ல மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் ட்யூனை மாற்றினார். பிறகு ட்யூனை மாற்றியதும் கண்ணதாசன் எழுதிய பாடல் தான் தூது செல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தோழி என்று தொடங்குகிற பாடல்.
முதலில் கண்ணதாசன் எழுதிய பொன்மனச் செண்டு என்ற பாடல் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அடுத்த வாரம் கண்ணதாசனும் எம் எஸ் விஸ்வநாதனும் பேசிக் கொண்டிருந்தபோது எப்படியாவது இந்த பாடலை ஒரு படத்தில் வைத்து விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எம் எஸ் விஸ்வநாதன் அண்ணா இந்த ட்யூனை கடந்த வாரமே முக்தா ஸ்ரீனிவாசனின் படத்துக்கு போட்டு விட்டேன் புதிதாக வந்துள்ள வாலி என்பவர் தான் அதற்கு பாட்டு எழுதினார் என்று கூறியுள்ளார். எங்கு அந்த பாடலை பாடி காட்டு என்று கண்ணதாசன் கேட்க மெய்யேந்தும் விழியாக மலர் ஏந்தும் குழலாக நான் ஆடுவேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் பாடி காட்ட மெய்மறந்து போன கண்ணதாசன் வாலியை பாராட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…