Categories: சினிமா

காதலியை கிண்டல் செய்த இளைஞர்.. சினிமா பட பாணியில் பெரிய சம்பவம் பண்ணிய மாஸ் ‘ஹீரோ’.. அதிர்ச்சியில் திரையுலம்..

Spread the love

சினிமா பட பாணியில் காதலியை கிண்டல் செய்த நபரை கன்னட நடிகர் தர்ஷன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தர்ஷன் இவர் நடிகை பவித்ராவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகை பவித்ரா கௌடாவுக்கு ரேணுகா சுவாமி என்பவர் ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை செய்துள்ளார். இதனால் நடிகர் தர்ஷன் அவரை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர கமிஷனர் பி தயானந்தா தெரிவித்திருந்ததாவது “ஜூன் ஒன்பதாம் தேதி இந்த கொலை நடந்துள்ளது. ரேணுகா சுவாமி சித்தூரை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றுபவர். இந்த கொலை வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட ஒரு கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் தர்ஷன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.  மைசூரில் நேற்று காலை 8:30 மணி அளவில் விஜயநகர் ஏ சி பி சந்தானத்தால் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் படப்பிடிப்பிற்காக மைசூரில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

தற்போது வரை கிடைத்த விசாரணையில் நடிகர் தர்ஷனின் பவுன்சர்கள் ரேணுகா சுவாமியை அவர் முன்னிலையில் கொன்று அவர் வசிக்கும் காமாட்சி பாளையத்தில் உடலை போட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகின்றது. சடலத்தை அங்கிருந்த நாய்கள் தின்று கொண்டிருந்த போது அதைப் பார்த்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி காவல்துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.

பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை செய்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தான் ரேணுகா சுவாமி சமூக வலைதள கணக்கு ஒன்றின் மூலமாக நடிகை பவித்ரா கௌடாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் பவித்ரா கௌடாவின் சமூக ஊடக கணக்குகளை பரிசோதனை செய்த நிலையில் பவித்ரா கௌடாவுக்கு ஆபாசமான செய்தி அனுப்பியது உறுதியானது.

அதுமட்டுமில்லாமல் நடிகை பவித்ராவுக்கும் தர்ஷனுக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாகவும் 10 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நவம்பர் 2023 இல் பவித்ரா தனது மகள் குஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து இருந்தால் அதில் கூட தர்ஷன் அவருக்கு கேக் வெட்டி அவருடன் நடனம் ஆடுவதை நம்மால் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் பவித்ராவிடம் தவறாக பேசிய ரேணுகா சுவாமியை தர்ஷனின் பவுன்சர்கள் கொன்று உடலை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் வெளியாகி இருக்கின்றது. காவல்துறையினர் நடிகர் தர்ஷனை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Mahalakshmi

Recent Posts

விஜய் சேதுபதியை மிரட்டுவதை நிறுத்துங்கள்…! “ஜனநாயகன்’ படம் நடிச்சா மட்டும் போதாது…” நடிகர் விஜய்யையும் தவெகவையும் வெளுத்து வாங்கிய சீமான்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத்…

28 minutes ago

“திமுக ஆதரவாளர் மனைவி இப்படி சொல்லிட்டாங்களே…” ‘எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது…’ விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு குறித்து அதிரடி பதிவு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…

42 minutes ago

“நீங்க இருக்கிறப்ப எனக்கென்னப்பா கவலை…” காலை இழந்தும் சிரித்துக்கொண்டே சொன்ன தந்தை நிகர் மாமனார்… பிரபல இயக்குனரின் வைரல் பதிவு…!!

'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' மற்றும் 'நந்தன்' ஆகிய கவனத்தை ஈர்த்த திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இரா.சரவணன், தனது மாமனாருக்கு ஏற்பட்ட…

52 minutes ago

“கல்யாணமாகி 45 நாட்கள்தான் ஆச்சு…” புதுமணத்தம்பதிக்கு நடந்த கொடூரம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய…

1 மணத்தியாலம் ago

“பைக் வாங்கி தந்தோம்… இப்போ ஐபோன் கேட்குற…?” பாட்டி, அத்தையை மிருகத்தனமாக அடித்த பேரன்…. கதறிய பெண்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

“வரதட்சணை கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த பெண்…! ஆத்திரத்தில் மூக்கை கிள்ளி ரத்த களறியாக்கிய கணவர்… மாமனார் வீட்டில் அராஜகம்…. பகீர் சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…

1 மணத்தியாலம் ago