#image_title
நடிகர் கமலஹாசன் சிம்புவுக்கு ஒரு பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வளம் பெறுபவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான மாநகரம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது. பத்து தல திரைப்படம் மட்டும் ஒரு சுமாரான வரவேற்பை கொடுத்தது.
இருப்பினும் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி சுறுசுறுப்பாக நடித்து வருகின்றார் சிம்பு. ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கின்றார். இதற்கு இடையில் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
இப்படம் தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் சாட்டிலைட் உரிமம் பிரச்சினை தொடர்பாக எஸ்டிஆர் 48 திரைப்படத்தை தயாரிக்க இருந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகி இருக்கின்றது. இதனால் நடிகர் சிம்பு இப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாக கூறியிருக்கின்றார். அட்மின் என்ற புரொடக்ஷன் கம்பெனி மூலமாக இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த படத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகி இருந்தாலும், கமலஹாசனுக்கு நடிகர் சிம்பு மீது இருந்த பாசம் அப்படியே தான் இருக்கின்றது. மேலும் இப்படத்திற்கு சிம்புவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் அதனை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம்.
மேலும் நடிகர் சிம்புவுக்கு தானே பார்த்து பார்த்து அவரை செய்யச் சொல்லி அதற்கான மாடலை எல்லாம் அவரே ரெடி செய்து ரொம்ப ஸ்பெஷலாக அந்த ஜெர்கினை தயாரித்து சிம்புவுக்கு வழங்கியிருக்கின்றாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. என்னதான் சிம்பு படத்தை தயாரிக்கவில்லை என்றாலும் சிம்புவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையில் ஒரு அழகான பாசம் இருக்கின்றது என பலரும் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…
நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான 'ஜன நாயகன்', தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.…