Categories: சினிமா

வில்லனாக ரஜினியை மிரட்டிய ரகுவரன்.. இதுவரை ஒரு படத்தில் கூட கமல்ஹாசன் உடன் நடிக்காதது ஏன் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர்கள் கச்சிதமாக பொருந்தும் என்றால் அது ரகுவரனுக்கு தான். முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் பேசிய டயலாக் இல்லை என்றால் படமே இல்லை. இதனைப் போல மார்க் ஆண்டனி இல்லை என்றால் பாட்ஷா திரைப்படம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரகுவரன் வில்லனாக நடித்ததால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற நடிப்பு சூறாவளி 90களில் உச்சம் தொட்ட போது அவருக்கு ஈடு கொடுத்து நடித்து தன்னுடைய நடிப்பால் ஆண்டனி கதாபாத்திரத்தையும் மக்கள் மத்தியில் நிறுத்தியவர் தான் ரகுவரன். கேமரா முன்பு வந்து விட்டாலே நடிப்பு ராட்சசன் ஆக மாறி விடுவார். திரை உலகமே கொண்டாடிய கலைஞர்கள் பட்டியலில் ரகுவரனுக்கு தனி ஒரு இடம் உண்டு.

திரைப்பட கல்லூரியில் நடிப்புக்கான பட்டப் படிப்பை முடித்த பிறகு சில காலம் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது. ஹீரோவாக அறிமுகமான அடுத்த ஆண்டு சில்க் சில்க் சில்க் என்ற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். பிறகு 1986 ஆம் ஆண்டு விசு உடன் அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சிவா, ஊர்க்காவலன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இப்படி ரஜினியை வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வந்த ரகுவரன் கமல்ஹாசன் உடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இவர்கள் இருவரும் பணியாற்றும் சூழல் அடிக்கடி இருந்தும் அது கைநழுவி போய் உள்ளது. குறிப்பாக மணிரத்தினம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான நாயகனின் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க மணிரத்தினம் முதலில் ரகுவரனை தான் அணுகியுள்ளார். அதற்கு அவர் ஓகே சொன்னாலும் பிறகு சில காரணங்களால் நடிக்க மறுத்துள்ளார். ரகுவரன் அந்த கேரக்டருக்காக தலைமுடியை வெட்ட மறுத்ததால் அவர் படத்தில் இருந்து விலகியதாக ரகுவரன் மனைவி ரோகினி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் அன்றைய காலகட்டத்தில் கமலும் ரகுவரனும் இணைந்து நடிக்காததற்கு வேறு சில காரணங்களும் கூறப்பட்டது. அதாவது கமல் தன்னைவிட திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார் என்றும் அதனால் தான் அவர் ரகுவரன் உடன் சேர்ந்து நடிக்கவே இல்லை என்றும் பேசப்படுகிறது. ஆனால் அதெல்லாம் இல்லை என்பதை தன்னுடைய படங்கள் மூலமாகவே கமல் சொல்லி இருக்கிறார். தன்னைவிட நடிப்பில் சிறந்த சிவாஜி கணேசன் உடன் கமல் தேவர் மகன் படத்தில் நடித்தார். ரஜினியுடன் நடித்துள்ளார்.

Nanthini

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

19 minutes ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

30 minutes ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

59 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

1 மணத்தியாலம் ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

1 மணத்தியாலம் ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

1 மணத்தியாலம் ago